பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Sunday, July 1st, 2018
பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை இம்முறை குறித்த ஆலயத்திலேயே மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த குறித்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த 35 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் இவ்வாலயத்தின் அண்டிய பல பகுதிகள் தற்போது மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனவே இம்முறை குறித்த ஆலயத்தில் திருவிழாவை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆலய பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.


Related posts:
|
|
|


