பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறுவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022

கடற்றொழிலாளர்களுக்கு பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது, எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு முன்னேறுவேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுகத் இன்ரனேஷினல் பிரைவேட் லீமிடெட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

முன்பதாக யாழ்ப்பாணம் கல்லுண்டாய் தீதியில் அமைந்துள்ள ‘சுகந் இன்ரனாசினல்’  நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுகந்தசீலன் அரவிந்தனின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த  நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்பாபினை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலம் - தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் ...
அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் - தியாகி சிவகுமாரன் நினைவு தினத்தில் அமைச்சர் டக்ளஸ...