கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலம் – தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, August 22nd, 2023

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலங்களை பொருத்துவது தொடர்பாக தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த சூரிய மின்கலங்கள் பொருத்தப்படுவதன் மூலம், மீன்பிடித் துறைமுகங்களுக்கான மின்சார கட்டண செலவுகளை மீதப்படுத்த முடியும் என்பதுடன் மேலதிக வருமானத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கையின் ஆழ் கடல் மீன்பிடிப் படகுகளை கண்காணித்தல் மற்றும் வி.எம்.எஸ். எனப்படும் படகு கண்காணிப்புக் கருவிகளை செயற்படுத்துவதில் காணப்படும் சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரியுடன் கலந்துரையாடியதுடன், வி.எம்.எஸ். பொறிமுறையை வினைத் திறனாக செயற்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts:

பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!
கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...