பலநாள் படகுகளுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

……..
கடலுணவு ஏற்றுமதி ஊடாக இலங்கைக்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்ற பலநாள் படகுகளுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலநாள் கலன்களின் உரிமையாளர்கள் இன்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, குறித்த உபகரணங்களுக்கான இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளமையால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக எடுத்துரைத்த நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் குறித்த உபகரணங்களின் இறக்குமதி தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், பலநாள் கலன்களின் உரிமையாளர்கள், தாங்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளை கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில், அவை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 02.09.2022
Related posts:
|
|