பறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

சட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு கடல் வளங்களும் அழிக்கப்டுவதாக முறையிட்டுள்ள பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள்> உடனடியாக சட்டவிரோத மீன்பிடி முறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்தினை மீண்டுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சிற்கு வருதைதந்த பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் மற்றும் அம்பாறை> காலிப் பிரதேசங்களின் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்;ற ஜீவனோபாய அச்சுறுத்தல்கள் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளனர்.
இதன்போது> பூநகரிப் பிரதேச கடற் பிரதேச்சத்தினுள் பிரவேசிக்கின்ற ஏனைய பிரதேச மீனவர்கள்> அனுமதியற்ற சிலிண்டர்கள் – வெளிச்சம் பாய்ச்சுதல் – மற்றும் அனுமதிக்கப்படாத இழுவைப் படகுகள் போன்ற சட்டவிரோத மீ;ன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்படுவதனால் சிறுதொழிலில் ஈடுபடுகின்ற பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் அவர்களிடம் பூநகரிப் பிரதேச கடற்றொழிலாளர்களினால் முறையிடப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் அவர்கள்> பூநகரிப் பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்வதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினரும் பங்குபற்றும் வகையில் கலந்துரையாடலை ஒழுங்கு செய்து அதனூடாக சட்ட விரோத மீன்பிடி முறையில் ஈடுபடுகின்றவர்களை தடுப்பது தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
அதேபோன்று அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மீனவர்கள்> கரையோர சூழலியல் பாதுகாப்பு திணைக்களதினர் மேற்கொள்ளுகின்ற கட்டுப்பாடுகள் காரணமாக கற்றொழிலாளர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பாக கடற்றொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான கிணறுகள் மற்றம் மலசலகூடம் போன்றவற்றைகூட அமைப்பதற்கு முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
காலிப் பிரதேசத்தில் இருந்து அமைச்சிற்கு வருகை தந்திருந்த கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள்> கடற்றொழில் அமைச்சராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இருந்த காலத்தில் தடைவிதிக்கப்பட்ட மீன்பிடி முறைகள் கடந்த அரசாங்க காலத்தில் தளர்த்தப்பட்டமையினால் தாங்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதா தெரிவித்தனர்.
கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து பிரச்சினை ஆய்வு செய்து நியாயமான தீர்வுகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|