கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தி நிலையங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

Thursday, March 10th, 2022

பரந்தனில் அமைந்துள்ள கரைச்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாண் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

இதன்போது, பாண் மற்றும் சிற்றுண்டி உற்பத்திகள், தரம் மற்றும் விற்பனை தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர், உற்பத்திகளை மேலும் அதிகரித்து மக்களுக்கு தரமான உணவுகளை தேவையானளவு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ள வேணடிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் ஆராய்ந்தார்.

உள்ளூர் உற்பத்திகளை விஸ்தரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்ட வருகின்ற நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த உள்ளூர் உற்பத்தி நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பரந்தன் இரண்டாம் கட்டையில் அமைக்கப்பட்டுள்ள கரைச்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்கதனதின்  தேங்காய் எண்ணை உற்பத்தி மற்றும் நெல் ஆலைகளுக்கான கண்காணிப்பு விஜயத்தினை  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதன் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், உற்பத்திகளை மேலும் அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதுடன் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: