உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 15th, 2016

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு யாழ்.மாவட்ட நீதிபதியின் விடுமுறையின் காரணமாக டிசம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கு விசாரணை இன்றைய தினம் (15) யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மாவட்ட நீதிபதியின் விடுமுறை காரணமாக குறித்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

3

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசாத தனக்கு அவமானத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை பேசியதாக உதயன் பத்திரிகையில் வெளிவந்த உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா 500 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மாவட்ட நீதிபதியின் விடுமுறை காரணமாக பதில் நீதிபதி அரியரட்ணம் முன்னிலையில் வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் பொருட்டு டக்ளஸ் தேவானந்தா தரப்பில் சட்டத்தரணி அப்துல் நஜீம் ஆஜராகியிருந்தார்.

 2 (1)

Related posts:


மயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்!செயல...
எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுக...