தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள்  முற்றாக அகற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 7th, 2017

இழுவை மடி மூலமாக சிறிய படகுகளைக் கொண்டு, குறிப்பிட்ட கடற் பகுதியில், எமது ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வேண்டும் என இலங்கையில் சில கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாற்றுத் தொழில் முறைமைக்கான ஏற்பாடுகள் கிடைத்து அத் தொழில் சார்ந்து இக் கடற்றொழிலாளர்கள் பழக்கப்படும்வரை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், ஏனைய எமது கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் இதனை அனுமதிப்பது குறித்து கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஏனெனில், நிகழ்கால மற்றும் எதிர்கால எமது கடல் வளங்களினதும், கடற்றொழிலாள மக்களினதும் நலன்களை அவதானத்தில் கொண்டு, வளங்களை  பாதுகாத்து வைப்பது எமது பொறுப்பாகும். இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இருப்பினும், மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு எமது கடற்றொழிலாளர்கள் பழக்கப்படும்வரை, ஏனைய எமது கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில்  ஒரு நிவாரணமாக இதற்கான அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது நாட்டில் சர்வதேச கடற் பரப்பில் தொழில் செய்வதற்கான சர்வதேச ரூனா (வுருNயு) ஆணைக்குழு அனுமதி சுமார் 1600 படகுகளுக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி பெறப்பட்டுள்ள அனைத்து படகுகளும் தொழிலில் ஈடுபடாத நிலை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. இவ்வாறு தொழிலில் ஈடுபடாத அனுமதிப் பத்திரங்களை மீளப் பெற்றும், மேலும் அனுமதிப் பத்திரங்களபை; புதிதாகப் பெற முடியுமாயின் அவற்றையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களில் இனங்காணப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இங்கு அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

Related posts:

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரை யாடலில் டக்ளஸ் தேவானந்தா !
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை - கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்த...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறை...