இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, April 26th, 2024


………
இலங்கையில் இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள  பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஆராய்ந்துள்ளார்.

இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் அவர்களுக்கான  போதுமான இறால் குஞ்சுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாமல் இருப்பது தொடர்பாகவும்,  உற்பத்திச் செலவுகள் அதிகரிப்புக் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள், வளர்க்கும் இறால்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற பிரச்சனைகள் காரணமாக இறால் உற்பத்தியும், ஏற்றுமதியும்  குறைந்து வருவது அவதானிக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சரின் செயலாளர் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் , திணைக்களத்தின் பணிப்பாளர்கள் , நாரா மற்றும் நெக்டா நிறுவனங்களின் தலைவர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:


உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மற்றுமொரு மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!
அமைச்சர் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை - கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி!