பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபதி!

Tuesday, November 21st, 2017

பனை மரத்திலிருந்து “கள்” இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அன்மையில் வெளியாகியிருந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உடனடியாக கவனம் செழுத்தி பனை மரத்திலிருந்து “கள்” இறங்குவதற்கு வசதியாக அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.

நேற்று(20.11.2017) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கடசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது ,“கள்” இறக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக வெளியான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இவ்விடயத்திற்கு உடனடியான தீர்வு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

“கள்” இறக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து குறிப்பாக வடமாகாணத்தில் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும்,பனைசார் உற்பத்தி முயற்சிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுடனும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஆழிப் பேரலை அனர்த்த தினத்தை அனைவரும் நினைவு கூருவோம்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!

ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
வடக்கு- கிழக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!