படகு கட்டும் தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Friday, January 13th, 2023

மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள SLYG நிறுவனத்தின் படகு கட்டும் தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்டு, குறித்த தொழிற்சாலையிலேயே தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ள இளைஞர்களுடன்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதுடன், அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.

குறித்த தொழிற்சாலை உருவாக்கப்பட்ட போது, உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு நவீன கடற்றொழில் கலன்கள் தரமாகவும் நியாயமான விலையிலும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழிற்சாலைக்கான ஆளணி வளங்கள் உள்ளீர்க்கப்படுகின்ற போது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து வகையான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே - மகளிர்தின செய்தியில் செயல...
வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது - மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? - விவசாய அமைச்சர...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...