மருந்து தட்டுப்பாடானது வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றதா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, August 22nd, 2019

அரச வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்குக் குறைபாடுகள் உள்ளதாக சில வாரங்களாகவே ஒரு குற்றச்சாட்டு பல்வேறு தரப்பினரால் ஊடகங்களின் வாயிலாகக் கூறப்பட்டு வருகின்றது.

இத்தகைய தட்டுப்பாடானது வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றதா? அல்லது அது தொடர்பிலான கவனயீனமா? என்பது பற்றி உரிய தரப்பினர்கள் கண்டுகொள்ளாத நிலையும் இல்லாமல் இல்லை

என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்;பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏற்கனவே சில மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன. பின்னர் மீண்டும் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. பின்னர் மீண்டும் 73 வகையிலான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

என்றாலும் எமது மக்கள் மருந்துகளுக்கென்றே அதிகூடிய விலைகளையே கொடுக்க வேண்டிய நிலைமைகளில் இருக்கின்றனர். இதற்குக் காரணமாக தரம் குன்றிய மருந்துகளுக்கான விலைகளே குறைக்கப்படுகின்றன என்றும் தரமான மருந்துகளின் விலைகளில் குறைப்புகள் மேற்கொள்ள இயலாத நிலை இருப்பதாகவும் மருந்தகங்களிலிருந்து தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இன்று இங்கே கிட்டத்தட்ட 60 வகையிலான மருந்துகளுக்கான உச்ச வரம்பு விலைகள் குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டளைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மருந்து வகைகள் இறக்குமதியானது வணிகத் துறையின் கரங்களில் இருக்கின்ற வரையில், அவற்றின் விலைகள் மற்றும் தரம் குறித்து நிச்சயமற்ற ஒரு தன்மையே நிலவுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

அண்மையில்கூட புற்று நோயாளர்களுக்கானது எனக் கூறப்படுகின்ற ‘ஹெர்ரிகெற்’ – ர்நசவiஉயன  –  என்கின்ற வர்த்தகப் பெயர் கொண்ட மருந்து தொடர்பில் இந்த நாட்டில் ஒரு சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

ஏதேனுமொரு மருந்து ஒரு நாட்டில் தயாரிக்கப்படுகின்றபோது, அதற்கு ‘கோப்’  (ஊழுPP)  அதாவது – ஊநசவகைiஉயவந ழக Phயசஅயஉநரவiஉயட  Pசழனரஉவ   சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்பதுடன், இந்த சான்றிதழானது அநேகமான நாடுகளில் சுகாதார அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் மூலமாகவே வழங்கப்படுகின்றது என்கின்ற நிலையில், மேற்கூறப்பட்ட ‘ஹெர்ரிகெற்’ – ர்நசவiஉயன – என்ற பெயரிலான  மருந்துக்கான சான்றிதழ் ரஸ்ய நாட்டின் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு வழங்கியிருந்ததாகவும் தெரிய வந்திருந்தது.

தொழில்நுட்பக் குழுக்கள் பலவும் இந்த மருந்து தகுதியற்றது எனத் தெரிவித்திருந்தும், அந்த எதிர்ப்புகளைக் கணக்கில் எடுக்காது மேற்படி பெயர் கொண்ட மருந்து இறக்குமதிக்கான டென்ரர் வழங்கப்பட்டிருந்ததாகவும், இந்த மருந்தினை இந்தப் பெயரில் தாங்கள் கோருவதில்லை எனப் புற்றுநோய் வைத்தியர்களது சங்கத்தின் தலைவரும் தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலைமைகள் குறித்துப் பார்க்கின்றபோது, எமது மக்களுக்குக் கிடைக்கின்ற மருந்துகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை எமது மக்கள் கொண்டிருக்கின்றனர் என்றே கூற வேண்டியிருக்கின்றது.

Related posts:

வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம...
வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில...