தபால் மூல வாக்காளர் பெருமக்களுக்கு!

Wednesday, October 30th, 2019

எமது நாட்டின் 7 வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பானது நாளையும், நாளை மறுதினமும் நவம்பர் மாதம் 4ம் திகதியும் நடைபெறவிருக்கின்றது.

அர்ப்பணிப்புடன் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் கடந்த காலங்கள் தொட்டு அரச பணிகளில் ஈடுபட்டு வருகின்ற தங்களது உழைப்பினை நாம் எப்போதும் கௌரவத்துடன் வரவேற்று வந்துள்ளோம்.

குறுகிய சுயலாப அரசியல் தலையீடுகளைப் புகுத்தாமல் மகத்தான மக்கள் நலன்சார்ந்த பணியை மாத்திரமே நோக்கமாக் கொண்டு நாங்கள் கடந்த காலங்களிலே அரச பணியாளர்களுடனான உறவுகளைப் பேணிவந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது அரச பணிகளில் பல்வேறு பதவிகளில் ஆயிரக்கணக்கான எமது மக்களை நாம் அமர்த்தி இருக்கின்றோம். தற்போது ஆட்சி அதிகாரத்தில் நாம் இல்லாத காரணத்தினால் எமது மக்களின் மொழி தெரியாத பலர் எமது பகுதிகளில் அரச பதவிகளில் நியமனம் பெற்று, எமது இளைஞர் யுவதிகளுக்கான பதவி வெற்றிடங்களை அபகரித்துக் கொண்டுள்ளனர்.

இத்தகையை நிலைமைகள் மாற வேண்டும். அரச பணியாளர்கள் அனைவரும் சுய கௌரவத்துடன், சுதந்திரமாக பணியாற்றக் கூடிய நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். முறையற்ற இடமாற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய அதிக வாய்ப்பினைக் கொண்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரு. கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களித்து அல்லது வெற்றியில் பங்கெடுப்பதன் மூலமாக எம்மால் அரச பணியாளர்களுக்கு சௌபாக்கியமான சூழலை உருவாக்கித் தர முடியும்.


எம்மை நம்புங்கள்! மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றியின் பங்களிப்பை உறுதிசெய்வீகளாக
செய்வோம்! செய்விப்போம்

Related posts:

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்ச...
முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!
வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் ...

செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...
ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - ...
எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு - கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!