ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களிலிருந்து மீன்களை இறக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதி!

Friday, March 27th, 2020

ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களிலிருந்து மீன்களை இறக்கும் பணிகள் திக்கோவிற்ற துறைமுகத்தில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளிலிருந்து மீன்களை இறக்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களோடு தரித்துநிற்கும் படகுகளையும், மீன்களையும் சுகாதாரத்துறையினரின் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பின்னர் இன்றையதினம் அப்படகுகளிலிருத்து மீன்களை இறங்குவதற்கு அமைச்சர் அனுமதியளித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் உணவை கொள்வனவு செய்யும் மக்களுக்கு நியாயமான விலையில் மீன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு திறைசேரி ஊடாக 60 கோடி ரூபாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் திக்கோவிற்ற மீன்பிடித்துறைமுகத்தில் தரித்து நின்ற ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களிலிருந்து மீன்கள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:


அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! - டக்ளஸ் தே...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துர...
இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!