இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!

Friday, September 2nd, 2022


இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த முதலீட்டாளர்கள் இன்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, நவீன முறையிலான புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கும், ஏற்றுமதித் தரத்திலான மீன்பிடிப் படகுகளை கட்டுகின்ற தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கான விருப்பத்தினை தெரிவித்தனர்.

குறித்த விடயங்களை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்க விரும்புகின்ற திட்டங்கள் தொடர்பான திட்ட வரைபுகளை சமர்ப்பிக்குமாறு முதலீட்டாளர்களை கோரியதுடன், நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக பரந்தளவான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டுள்ளமையினால், அதுதொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். – 02.09.2022

Related posts:

வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் ...
அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் – ஈ.பி.டி.ப...

பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்ன...
அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!