அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Friday, May 28th, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்டாலும் அரசாங்கத்தால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய வேண்டும்.

அதற்காக எம்மை நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாத்துக் கொண்டு, முன்னோக்கி நகர வேண்டுமே தவிர, முடங்கியிருக்க வேண்டாம் என ஈ.பி.டி.பி யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களுக்கு, கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஆலோசனை வழங்கினார்.

மாநகர சபையின் செயற்பாடுகளை வினைத் திறனுடன் கொண்டு செல்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இன்று யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...
அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...