நிவர் புயல் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!

Thursday, November 26th, 2020

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த இயற்கை அனர்த்தம்  காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் எழுவைதீவு பகுதியில் சுமார் மூன்று வீடுகள்  பாதிப்படைந்துள்ளன.

இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை தொடர்பாக ஆராயுமாறு ஊர்காவற்துறை பிரதேச சபை தலைவர் ஜெயக்காந்தனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு  நேரடியாக விஜயம் மேற்கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவர், நிலமைகளை ஆராய்ந்ததுடன் அவை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிராந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக...
நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏ...
பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்...

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக...
சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நட...
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...