வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017

வெளிநாடுகளில் மருத்துவத் துறைப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கைக்குத் திரும்புகின்றவர்களுக்கு இலங்கை மருத்துவ சங்கத்தின் மூலமாக நடாத்தப்படுகின்ற பரீட்சையில் தோற்றுவதற்காக அம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உட்படுத்துகின்ற நிலையில் ஏற்கனவே நமது நாட்டில் நடைமுறையிலிருந்த அம் மாணவர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்குப் பொருத்தமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்களை உட்படுத்துகின்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது.

குறிப்பாக ருகுனு பல்கலைக்கழகத்தில் கற்கச் செல்கின்ற தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம்பெறுவதில்லை என்றும் அதே நேரம் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே கௌரவ அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts: