“மக்களே நாம், நாமே மக்கள், மக்கள் வேறு நாம் வேறல்ல” – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Saturday, June 1st, 2024
மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையிலேயே எமது கட்சியின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருந்துவருகின்றமையால் நாம் எடுக்கும் முன்னகர்வுகள் ஒவ்வொன்றும் முழுமையாக மக்களிடம் சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா “மக்களே நாம், நாமே மக்கள், மக்கள் வேறு நாம் வேறல்ல”என்ற ஒரு பிணைப்பான சூழல் உருவாகியுள்ளது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைத்து செயற்பாடுகளும் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (01.06.2024) இடம்பெற்ற மாவட்ட மற்றும் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலின்போது, கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் –
எமது கட்டசியின் அரசியல் வரலாறு என்பது சாதாரணமானதொன்றல்ல. அது பல்வேறு தியாகங்களையும் வலிகளையும் கடந்துவந்தது. அதுமாத்திரமல்லாது அதிகளவான இடர்பாடுகளையும் திட்டமிட்ட அவதூறுளையும் கடந்து மக்களுக்கான சேவையில் எடுத்துக்கொண்ட இலக்கில் வெற்றிகண்டுள்ளது.
கடந்தகாலங்களில் நாட்டில் அழிவு யுத்தம் நாட்டையும் எமது மக்களையும் சூழ்ந்திருந்தமையால் பல்வேறு விதமான சூழ்நிலைகளில் மக்கள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமைகள் மாறிவட்டது.
இன்று எமது மக்களுக்கு தத்தமது வாழ்வாதார பொருளாதாரத்தில் மேம்பாடு காண்பதற்கான வழிவகையே முதான்மையானதாக இருக்கின்றது. அத்துடன் அபிவிருத்தி அரசிலூரிமை என உள்ளன. அதனை நாம் எமது கட்சியின் கொள்கையான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலையிலிருந்து முழுமையாக செய்து வெற்றிகண்டு வருகின்றோம்.
ஆனால் எமது கட்சியின் உறுதியானதும் ஜதார்த்தபூர்வமானதமான கொள்கை நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் முழுமையானதாக மக்களிடம் சென்றடைவதில்லை என்ற குறைபாடு உள்ளது.
இதற்கான தவறு எங்கு உள்ளதென்பதை கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தவறுகளை கண்டறிந்து அதற்கான தீர்வை இனங்கண்டு மக்களிடம் நெருக்கமான வகையில் சென்று கட்சியின் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் மக்கள் மயமானதாக்க வேண்டும். அதனூடாக எமது நாம் எடுத்துக்கொண்ட இலக்கை அடைய ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


