பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019

பாதுகாப்பற்ற இரயில் கடவைகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்;துகள் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுயிலுள்ள புகையிரதக் கடவைகளில் மிக அதிகளவிலான விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற நிலைமைகளே காணப்படுகின்றன. இவற்றில் கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும் அது நிரந்தரமற்றதாகவே அமைவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில் இத்தகைய பாதுகாப்பற்ற இரயில் கடவைகள் 685 வரையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும், அவற்றில் வடக்கிற்கான இரயில் பாதையில் அமையப்பெற்றுள்ள பாதுகாப்பற்றக் கடவைகளிலேயே அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

மேற்படி பாதுகாப்பற்ற இரயில் கடவைகளில் கடவைக் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களது தொழில் நிரந்தரமற்றதாகவும், நாளாந்தம் 250 ரூபாவினை மாத்திரமே ஊதியமாகக் கொண்டதுமாக இருக்கின்றது. அத்துடன், இவர்களது நியமனங்கள் இலங்கை புகையிரதத் திணைக்களம் சார்ந்ததுமல்ல, அது பொலிஸ் திணைக்கத்;தைச்; சார்ந்ததாக இருக்கின்றது.

தங்குவதற்கு எதுவிதான வசதிகளும் வழங்கப்படாமல், விளக்குகள்கூட வழங்கப்படாமல் இவர்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியிலேயே பணிகளை நிறைவேற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவே இவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆரம்பத்தில் இப்பணியில் இணைந்திருந்த பலர் இத்தகைய குறைபாடுகள் காரணமாக அந்தப் பணியிலிருந்து ஒதுங்கிச் சென்றுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இவ்வாறு, இரயில் பாதையில் பாதுகாப்பற்ற கடவைகளில் மிக முக்கியமான பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் கவனமெடுத்து, அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்பற்ற இரயில் கடவைகளில் பல உயிர்களைப் பாதுகாக்கின்ற இத்தகைய கடவைப் பாதுகாப்பாளர்களது தொழிலே பாதுகாப்பாக இல்லாதபோது, ஏனைய உயிர் பாதுகாப்பு குறித்து எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என்ற கேள்வியே எழுகின்றது.

மேலும், வடக்கிலே இரயில் பாதையில் நகரப் பகுதிகளில் காணப்படுகின்ற கடவைகள் பலவற்றில் தன்னியக்க கடவைப் பாதுகாப்புகள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. எனவே, நகர்ப்புற கடவைகள் அனைத்திலும் தன்னியக் கடவைப் பாதுகாப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மையில், வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற இரயில் கடவையில் மிகவும் கோரமான விபத்தொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த கடவையூடான பாதையானது சட்டவிரோதமானது என புகையிரதத் திணைக்களத்தினால் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள், கடந்த மாதம் 25ஆம் திகதி அப்பாதைக்கு பாதுகாப்பு வேலியொன்றை பொது அமைப்புகளின் உதவியுடன் அமைத்திருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி புகையிரதத் திணைக்களத்தினர் அந்த வேலியை அமைப்பதற்கான அனுமதி தங்களிடம் இருந்து பெறப்படவில்லை எனக் கூறி, அந்த வேலியை அகற்றிவிட்டு, அந்த வீதியில் தண்டவாளங்கள் இட்டு, மக்களின் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அம் மக்கள் முறையிடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, அம் மக்களுக்கான போக்குவரத்து வசதிக்கு ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில...
ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர...
கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. - அமைச...