நவீன தொழில் நுட்பங்களை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, February 22nd, 2023
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களையும் அனுபவங்களையும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தனியார் கல்லூரிகளின் ஒன்றியம் என்ற அமைப்பின் பிரதிநிகள் இன்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். –
இதனிடையே திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹீரூப் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, திருகோணமலை மாவட்டத்தின் கடற்றொழில் சார்பான வேலைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழ் பேசும் தரப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது ...
கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...
பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...
|
|
|


