யாரையும் பழிவாங்குவது எமது நோக்கம் அல்ல – மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, October 26th, 2021

யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியமைக்காக தன்னை துரோகி என்றவர்கள், இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில் வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரும் இன்றைய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின்இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேசத்தில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அமைச்சர் முக்கியமாக வாகரை பிரதேசத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றினை அமைப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் வாகரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்தி இங்கிருந்து தனித்துவமான மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பபிற்கான இன்றையதினம் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..

இந்நிலையில் வாகரையில் கடலுடன் களப்பு இணைகின்ற முகத்துவார பிரதேசம் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள மணல் திட்டுக்களை அகற்றி,  பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான கள விஜயத்தினையும் கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டார்.

சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற குறித்த பிரதேசத்தில், எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரதேச மக்களினால் எடுத்துரைக்கப்பட்டது

இந்நிலையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வாழைச்சேனை துறைமுகத்திற்கும் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று மாலை வாழைச்சேனை  தந்த அமைச்சர் மீன்பிடித்துறைமுகத்தில் பிரதேச மீனவர்கள் எதுர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீனவர்களுடனும் மீன்பிடித்தறைமுக அதிகாரிகளுடனும் கலந்துறையாடியதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததுடன் ஏனைய பிரச்சினைகளுக்கு  கட்டம் கட்டமாக தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அத்துடன் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து தொழிலுக்காக கடந்த மாதம் 26ம் திகதி சென்ற படகு காணாமல் போன நிலையில் அந்தமான் தீவில் கடலோர காவளாலிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் உள்ள நான்கு மீனவர்களும் தேகாரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்களையும் படகையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தர்.

இதே வேளை காணாமல் போன படகின் குடும்ப உறுப்பினர்களை வாழைச்சேனை அல் ஸபா மீனவர் சங்கத்தில் சந்தித்த அமைச்சர் அவர்களிடம் மிக விரைவில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பி;டத்தக்கது..

Related posts:

கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ...
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!
சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர்...

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளு...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
பிரதமர் ரணில் உடனடியாக அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !