நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் – செயலணியிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Wednesday, August 10th, 2016

தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உணரக்கூடிய வகையிலும் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியிடம் வலியுறுத்தியுறுத்தியுள்ளார்.கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு இன்றை தினம் (10) வருகை தந்திருந்த மேற்படி குழுவினருடனான கலந்துரையாடலின்போதே இதனை வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவே ஈ.பி.டி.பியாகிய நாம் எமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த யுத்தமானது எமது மக்களின் மனங்களில் ஆறாத காயங்களையும் ரணங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் தேசிய நல்லிணக்கத்திற்கான அடிப்படைகளையும் பாதிக்கச் செய்துள்ளது.
A (10)
சிதைந்துபோன தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை எட்டுவதும் அதனடிப்படையில் எமது மக்களின் முக்கியத்துவமிக்க பிரச்சினைகளான: காணாமல்போனோர் விவகாரம்இ நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை படைத்தரப்பினர் வசமுள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுவது தமிழ் மொழி அமுலாக்கத்தை அர்த்தமுள்ள வகையில் செயற்படுத்துவது எமது பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யுத்த வெற்றிச் சின்னங்களை அகற்றி மக்கள் மனங்களிலுள்ள யுத்த வடுக்களை இல்லாமல் செய்வது புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் அதேவேளை அவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் நீதியானதும் நியாயமானதுமான தீர்வுகளைத் தரக்கூடிய பொறிமுறைகளை ஏற்படுத்துவதன் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் வலியுறுத்தினார். இதேவேளை தமிழ்பேசும் மக்கள் சந்தித்த படுகொலைகள் மற்றும் ஆட்கள் காணாமற்போதல் ஆகியவற்றை விசாரிப்பதற்கான செயற்பாடுகள் 1983ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
 123456
அத்துடன் ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளிடம் முறைப்பாடுகளையும் சாட்சியங்களையும் முன்வைக்கும் சிலர்இ எமது கட்சி மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருக்கின்றார்கள் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவும் உண்மைகள் கண்டறியப்படவும் உரிய பொறிமுறைகள் அமைக்கப்படுவதும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.நீதியைக் கண்டறியும் பொறிமுறைச் செயற்பாடுகள் உண்மையைக் கண்டறிவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வழிவகை செய்யப்படுவதுடன் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி பாதுகாக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்தார்.
A (13)

Related posts:

பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...
விவசாய ஊக்குவிப்புத் திட்டமம் - யாழ் மாவட்ட விசாயிகளுக்கான தானிய விதைகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வை...

எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியான முறையில் பயன்படுத்துங்கள் - கிளிநொ...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அண...