எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிளிநொச்சியில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 29th, 2018

நாம் யதார்த்தமாகக் கூறிய விடயங்களை சக தமிழ்க் கட்சிகள் நன்கு தெரிந்துகொண்டிருந்தும் அவற்றை ஏற்றுக்கொள்ளாதது ஒரு துரதிஷ்டமான செயலாகவே பார்க்கமுடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாட்டில் நடந்த கொடிய யுத்தத்தின் பாதிப்புக்களை இந்தப் பகுதி மக்கள் மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து மக்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

இந்த அழிவு யுத்தத்தினால் தமது உறவுகளை பறிகொடுத்தவர்களாகவும் உடமைகளைத் தொலைத்தவர்களாகவும் அங்கவீனர்களாகவும் ஆகியுள்ள நிலையில் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு முகங்கொடுத்தபடி இந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

குறிப்பாக சொல்லப்போனால் இந்த யுத்த இழப்புகளிலிருந்து மீண்டு இதுவரை ஒரு இயல்பு வாழ்வுக்கு மக்கள் இன்னும் திரும்பவில்லை என்பது வருத்தமான விடயமாகும்.

இந்த நிலையில் இவ்வாறு அவலப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலேயே எமது செயற்றிட்டங்களை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

மக்களாகிய உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்கொண்டு செல்லும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுத்து அதனூடாக ஒரு உயர்ந்த வாழ்க்கையை தோற்றுவிப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனான உழைப்பை வழங்கி வருகின்றோம்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் அப்போதைய அரசுடன் இணைந்து இணக்க அரசியலை முன்னெடுத்து பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்ட போதிலும் எமக்கு அதிகளவான அரசியல் பலத்தை மக்கள் தராத நிலையில் எம்மால் தொடர்ந்து அவ்வேலைத் திட்டங்களை முன்கொண்டுசெல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts:

தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ள...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் ...

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்...