தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியின் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 4.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
Thursday, June 25th, 2020
பழுதடைந்துள்ள தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த நீர் வெளியேறு பகுதியை புனரமைப்பு செய்வதற்காக 4,22 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ள நிலையில் புனரமைப்பதற்கான கேள்விகள் தற்போது கோரப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தினால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழினுட்ப மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த நீர் வெளியேறு பகுதியின் வேலைத்திட்டத்துக்குரிய மதிப்பீடானது மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு யாழ் மாவட்ட பிரதேச செயலகத்திற்;கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது..
அத்துடன் குறித்த நிதி இலங்கையில் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்படுகின்ற களப்புகள் உள்நாட்டு நீர்நிலைகளின் நீர்ச்சூழல் தொகுதியின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி செய்வதனூடாகவும் நீர் உயிரின வளர்ப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது உள்ள பாலத்தின் கீழ் போரின் போது தகர்க்கப்பட்ட பழைய பாலத்தின் இடிபாடுகள் இருப்பதால் தொடர்மழையின் போது நீரோட்டத்தை அது தடைசெய்கின்றது.
அத்துடன் கடும் காற்றின் போது படகுகள் பாலத்தின் மறு பகுதிக்கு கொண்டு வருவதற்கும் மீனவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளார்கள். இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் இடிபாடுகளை அகற்றித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


