அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, March 10th, 2020

யுத்ததினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களின்போது கோரப்படும் தகுதி நிலைகளில் சற்று தளர்வினை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வகையிலேனும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை காணவேண்டும் என்ற நோக்கிலேயே தன்னுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், வளம் நிறைந்த வன்னி மண்ணை வளம் கொழிக்கும் பிரதேசமாக மாற்றும் முயற்சியின் ஒரு கட்டமாக அங்கு காணப்படுகின்ற நன்னீர் மற்றம் உவர்நீர் நீர் நிலைகளை அபிவிருத்தி செய்து நீர் வேளாண்மையை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேராவில், வள்ளுவர்புரம், குறவயல், மூங்கிலாறு, கைவேலி, மருதமடு, வேணாவில் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அந்தவகையில் கைவேலி பகுதியில் நேற்று(09.03.2020) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மக்களது பிரச்சினைகளை மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வளம் நிறைந்த முல்லை மண் கடந்தகால திறனற்ற தலைமைத்துவங்களின் வழிநடத்தல்களாலும் சுயநலன்களாலும் பாழாக்கப்பட்டுக் கிடக்கிறது என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் அவர்கள், இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுத்து மக்களுக்கு சிறந்த வாழ்வியல் நிலையை உருவாக்கிக்கொள்ள தம்;மிடம் சிறந்த பொறிமுறை இருப்பதாகவும் தனது இந்த தூர நோக்குள்ள சிந்தனைக்கும் உழைப்பிற்கும் மக்கள் பூரண அதரவை வழங்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு சிலரின் பதவி ஆசைக்கான உசுப்பேற்றல்களுக்கும் யதார்த்தமற்ற சிந்தனைகளுக்கும் எடுபடாமல் எதிர்காலத்திலேனும் மக்கள் சிந்தித்து செயற்பாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

ஏற்கனவே, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் ஊடாக கிளிநொச்சி> முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் வேளாண்மை அபிவிருத்தி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சரியான அரசியல் தலைமையின்மை காரணமாக பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கைவிடப்பட்டிருந்த இறுதி யுத்தம் இடம்பெற்ற நந்திக்கடல் மற்றும் நாயாறு போன்ற நீர் நிலைகள் தூர்வாருதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனுடாக அப்பிரதேசததில் வாழுகின்ற சுமார் 4000 குடும்பங்கள் நன்மையடையும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையிலும் காபாந்து அரசாங்கத்தின் அமைச்சராக செயற்பட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றமை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களை நாடிச் சென்று அவற்றை தீர்த்து வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயற்பாடு வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மாத்திரமன்றி தென்னிலங்கை மக்கள் மத்தியலும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆழ்கடல் சர்வதேச மீன்பிடிக் கலங்களினால் பாதிக்கப்பட்டவர்களினால் டிக்கோவிற்ற பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மற்றும் அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்விற்கு எதிரான போராட்டம் போன்றவற்றை அமைச்சர் அணுகிய விதம் தென்னிலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்ற...
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை – ...

வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்: நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆ...
மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப...
கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவை...