மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்று: டக்ளஸ் எம்.பி. கலந்து சிறப்பிப்பு!

Sunday, July 28th, 2019

புதிதாக கட்டுமாணம் செய்யப்பட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்றையதினம் பெருந்திரளான பக்தர்கள் புரைசூள நடைபெற்றது.

இந்த வெள்ளோட்ட நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் காரணமாக முற்றாக அழிந்துபோன மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேரை யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் கட்டுமாணம் செய்ய முயற்சிக்கப்பட்டபோது பல இடையூறுகளால் அது தடைப்பட்டுப் போயிருந்தது.

குறித்த விடயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் கொண்டுவந்ததை அடுத்து புதிய தேர் கட்டுமாணப் பணிகளுக்கு தடையாக இருந்த காரணிகளை துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று அவை சீர் செய்யப்பட்டு மீண்டும் தேர் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் காணப்படும் ஆலயங்களில் அதி உயரமான சிற்ப தேராக சுமார் 45 அடி உயரமுடையதாக சிற்ப வடிவமைப்பில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் தற்போது கட்டுமாணம்  செய்யப்பட்டு நிறைவு பெற்று இன்றையதினம் அது வெள்ளோட்டத்திற்காக வீதியுலா வந்தது.

குறித்த வெள்ளோட்ட நிகழ்வகளில் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டதுடன் சிறப்பக பூசை வழிபாடுகளைிலும் கலந்துகொண்டமமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புகழ் பூத்த கொழும்பில் வாழும் சிப்பாச்சாரியாரான கந்தசாமி இலங்கேஸ்வரன் அவர்களின் கைவண்ணத்தில் புதுப் பொலிவுடன் குறித்த சிற்பத்தேர் கட்டுமாணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: