தொடர்ந்தும் ‘இன்று போய் நாளை வா’ எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, February 9th, 2024

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற அருணாசலக் கவிராயரின் பாடலைப் போல் எமது ஜனாதிபதி அவர்களது நிலைமை மட்டுமல்ல, எம் அனைவரதும் நிலைமை இருந்து வருகிறது.  நாம் பெற்ற கடனையும் அடைக்க வேண்டும், பெறுகின்ற கடன்களையும் அடைக்க வேண்டும். கம்பனின் பாடலைப் போல் தொடர்ந்தும் ‘இன்று போய் நாளை வா’ எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம் (09.02.2024) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இத்தகையதொரு நிலைமை நாட்டில் நிலவுகின்றபோது, பிச்சைக்காரன் பழைய புண்ணை மீண்டும் மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே ஒரு சில தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சினைகளுக்கு முன்பாக வெறும் விமர்சனங்களையும், வியாக்கியானங்களையும் முன்வைத்து வருகிறார்களே அன்றி, பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான வழி விரிந்து வருகையில் அதில் பயணிப்பதற்கு முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கின்றனர்.

இந்த நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு தங்களது ஒத்துழைப்புகளை தருமாறு அனைத்துத் தரப்புகளிடமும் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டினைப் பொறுப்பேற்ற காலம் முதல் கேட்டு வருகின்றார்.

தத்தமது அரசியல் நோக்கங்கள் கருதி ஆரம்பத்தில் இந்த அழைப்பினை புறந்தள்ளியிருந்த பலருள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் ஜனாதிபதியின் நாட்டு நலன் கருதிய செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இன்று தங்களது ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் செயற்பட்டும், கருத்துக்களை முன்வைத்தும் வருவது வரவேற்கத்தக்கது.

அதேபோல் ஏனைய அனைத்துத் தர்பபினரும் ஜனாதிபதி அவர்களுடன் இந்த பயணத்தில் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்...
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  - நாடாளு மன்றத்தில் டக்ளஸ் ...