விடுமுறை தினத்தில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!

Sunday, June 11th, 2023

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு இன்று(11.06.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்ந்தார்.

குறிப்பாக, தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிற்கு சொந்தமான கப்பல் நங்கூரமிடும் தளம் உட்பட்ட காணி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை கையாளவது தொடர்பாகவும், குறித்த திணைக்களங்களுக்கு சொந்தமான சம்மந்தப்பட்ட பகுதியினை வினைத் திறனாக பயன்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 11.06.2023

Related posts:

யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – யாழ் மாவட்டத்தில் பல் பரிமாண நகரமாகின்றது வேலணை பிரதேசம்!

குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு!
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுத்துங்கள் - செயளளர் நாயகம் டக்ளஸ் தேவானந...