தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐ.நாவுக்கு அறிக்கை அனுப்புகின்றனர் – ஈ.பி.டி.பி நிலைப்பாட்டையே ஐநாவும் வலியுறுத்துகிறது என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Thursday, September 16th, 2021
தத்தாமது தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கைகளை அனுப்பியதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி வலியுறுத்துகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்துவதையே ஐ.நா. மனித உரிமை பேரவையும் வலியுறுத்தியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாங்கள் நீண்ட காலமாக செல்லிவந்த விடயம் அழுதும் பிள்ளையை அளவே பேறவேண்டும் என்பது போல நாங்கள் தான் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சக தமிழ் கட்சிகளது செயற்பாடுகளும் கருத்துகளும் தற்போது அமைந்துள்ளன.
சக தமிழ் கட்சிகள் ஐநாவுக்கு அறிக்கை அனுப்புவது தத்தமது தேர்தலுக்கான வாக்குறுதிகளுக்கானதாகவே இன்றுவரை இருக்கின்றது.
அத்துடன் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் ஐ.நா தங்களை ஏமாற்றி விட்டதாகவும் கூறியவர்கள் தற்போது சக கூட்டுக் கட்சிகள் என்று கூறுபவர்கள் பல்வேறாக பிரிந்து அறிக்கை அனுப்பியதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பிப்பதுதான சிறந்த ஆரம்பமாகும் என்பதுடன் சிறந்த நடைமுறையாகவும் அமையும் என நாம் தொடர்ச்சியாக கூறிவந்திருந்தோம்.
ஆனால் அதை சக தமிழ் கட்சிகள் மறுதலிப்பதாகவும் தவறான வழிகாட்டலை மக்களுக்கு காட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஐநாவின் கூட்டத்தில் கூட இந்த 13 ஆவது திருத்த சட்டத்தை தான் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஐநா கூறியிருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


