அமைச்சர் டக்ளசின் வேகத்துக்கு சில விடையங்களில் எம்மால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது – வடக்கின் ஆளுநர் சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, April 18th, 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்படும்  அமைச்சராக காணப்படுகின்ற நிலையில் அவரின் வேகத்துக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை என வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு்  கூட்டத்தில்  உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரவு பகல் பாராது மக்களுக்காக தன்னால் இயன்ற பணிகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறார்.

அவரின் செயற்பாடுகளுக்கு நாம்  ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில் அவரின் வேகத்துக்கு சில விடையங்களில் எம்மால்  வேகமாக நகர முடியாதுள்ளது.

வடக்கில் ஆரம்பிக்கப்பட உள்ள சூரியகல விட்டுத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் கட்டப்பட்ட நிலையில் நிறுவனத்துடன் அமைச்சரும் நாமும் கலந்துரையாடி  திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம் .

முன்பு தொகுதிகளாக வீட்டுத் திட்டமும் அதனோடு சூரிய மின்கலமும்  பொருத்துவதென தீர்மானிக்கப்பட்ட நிலையில்  தற்போது சூரிய மின்கலம் இல்லாத வீடுகளை கட்டிக் கொடுப்பது எனவும் சூரிய மின்கலங்களை பிறிதொரு பகுதியில் பொருத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் வட மாகாண சபை அவை தலைவர் சி வி கே சிவஞானம் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...