தேசிய வைத்தியசாலையாக தரமுயரும் யாழ். போதனா வைத்தியசாலை – அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பித்தார் அமைச்சர் டக்ளஸ் – வழிமொழிந்தார் ஜனாதிபதி ரணில் !
Tuesday, May 28th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக நேற்றைய (27.05.2024) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்திசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளது
முன்பதாக
இதேவேளை கடந்த 24.05.2024 ஆம் திகதி ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி திறக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்திய சாலையை தேசிய வைத்தியசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதியால் கூறப்பட்டது.
ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விடயத்தை கூறி அடுத்துவரும் அமைச்சரவையில் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
அதனடிப்படையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


