தள்ளாடியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை அமைப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் விருப்பம் – ஏதுநிலைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, September 19th, 2022

பள்ளிமுனையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்த செயற்பட்டு வந்த தனியார் நண்டுப் பண்ணை, திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சுமார் ஒரு வருடமாக செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த பண்ணையைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பண்ணையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், குறித்த பிரதேச கடற்றொழிலாளர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, கடலட்டைப் பண்ணைகளை தமக்கும் வழங்குமாறும், படகு ஒன்றில் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், படகுகளை கட்டுவதற்கான வாடிகளுக்கான கோரிக்கை போன்ற தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், சாத்தியமான விடயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.  

இதனிடையே

தள்ளாடி பகுதியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணையை அமைப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த பகுதியைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏதுநிலைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
வடக்கில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துவிட்டது- தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டக்ளஸ் எ...
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...