கைப்பணித்துறையின் மேம்பாட்டுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 22nd, 2017

பாரம்பரிய கைத்தொழில் துறையான கைப்பணித்துறையின் வளர்ச்சியையும் அதன் மேம்பாட்டினையும் மேம்படுத்துவதற்காக எமது பங்களிப்பு என்றும் உறுதுணையாக இருக்கும் என என செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

வடமாகாண தேசிய அருங்காட்சியக கைப்பணிதுறையின் உதவிப்பணிப்பாளராக இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடம்மாற்றம் பெற்றுச்செல்லும் க.நவதர்ஷன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினமான காலகட்டங்களில் எமது யாழ் மாவட்டத்தில் இந்த துறையை விரிவாக்கம் செய்வதில் தனது முழுமையான பங்களிப்பை செய்திருந்தவர் க.நவதர்ஷன் . வடக்கு மாகாணத்தில் இவர் செயலாற்றும் காலப்பகுதியில் இத்துறை பல வகையிலும் வளர்ச்சிகண்டுள்ளது. இதற்கு இவரது பொறுப்பு மிக்க செயற்பாடுகளும் அவர் மேற்கொண்டுவந்த அணுகுமுறைகளும்தான் காரணம் .

கடந்த காலங்களில் இவர் எம்முடன் கொண்டிருந்த சிறந்த உறவுகளால் இத்துறையின் வளர்ச்சிக்காக எமது கட்சி அதிகளவான பங்களிப்பை பெற்றுக்கொடுத்திருந்தது. இதன்மூலம் எமது வடக்கு மாகாணம் பலஅனுகூலங்களை பெற்றுக்கொண்டது.

இன்றையதினம்  கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் க.நவதர்ஷன் அங்கும் எமது பாரம்பரியம் மிக்க இத்துறையை மெருகூட்டி பாடுபடுவார் என நம்புகின்றேன். என தெரிவித்தார்.

முன்னதாக கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் க.நவதர்ஷன் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் குறித்த சங்கத்தின் தலைவர் கே.நாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மஞ்சவனப்பகுதி கணேஸ் ஐயர் அவர்கள் ஆசி உரையை வழங்கியிருந்ததுடன் குறித்த சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு!
தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...