விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Saturday, July 18th, 2020

விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே எமது மக்கள் அவலங்களாக அனுபவிக்கின்றார்கள் என்று தெரிவித்த ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்

தேவானந்தா, குறித்த அவலங்களில் இருந்து மக்களை மீட்பதற்காகவே தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதாவும் தெரிவித்தார்.

அராலியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஆயுதப் போராட்டம் விவேகமற்ற தலைமைகளினால் தவறான வழியில் திசை திருப்பப்பட்டமையினால் மோசமான அழிவுகளையும் மக்களுக்கு அவலங்களையும் ஏற்படுத்தி விட்டதாக தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டார்.

எனினும், குறித்த ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவன் என்ற வகையில் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று  மக்களுக்கான சிறந்த வாழ்வை ஏற்படுத்துவதற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெருமுன அணியினரே வெற்றி பெறவுள்ளமையினால் வடக்கு கிழக்கில் தனக்கு கணிசமான ஆசனங்கள் கிடைக்குமாயின் இலகுவாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்

Related posts:


மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் - தோழர்கள் மத்தி...
கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை – பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொள்ள...