தரமான கடலுணவு நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!

Saturday, October 17th, 2020

மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் ஆண்டு முழுவதும் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் சுமார் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற வாழ்கை செலவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்ததில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு நிதி வழங்கப்படுமானால், கடற்றொழிலாளர்களுக்கு அதிக கடலுணவு அறுவடை கிடைக்கும் காலப் பகுதியில் அவற்றை நியாயமான விலையில் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவன் மூலம் அறுவடை குறைந்த காலப்பகுதியில் அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் விநியோக்கிக்க முடியும் என்ற ஆலோசனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்டது.

கௌரவ அமைச்சரின் குறித்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உடனடியாக 200 மில்லியன் ரூபாயை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்தார்.

நாட்டின் வடக்கு பிரதேசத்தில் வருடந்தோறும் ஒக்டோபர் – பெப்ரவரி வரையான காலப் பகுதியும் தெற்கு பிரதேசத்தில் ஏப்ரல் தொடக்கம் செப்ரெம்பர் வரையான காலப் பகுதியிலும் காலநிலை மாற்றம் காரணமாக கடலுணவு அறுவடை வீழ்ச்சி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts: