தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தவர்கள் நாமே – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 7th, 2018

நாம் இந்த மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கான குடியிருப்புக்களை நிறுவி மக்களைக் குடியேற்றாது விட்டிருந்தால் எமது மக்களின் காணிகள் மட்டுமல்லாது மக்களின் பிரதிநித்தித்துவமும் இன்று இல்லாது போயிருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிலாவெளி வீதி ஆனந்தபுரி திருகோணமலையில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட பணிமனை வழாகத்தில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

திருகோணமலை மாவட்டத்தில் நாம் 10 இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்களை நிறுவி அங்கு மக்களைக் குடியமர்த்தி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்திருந்தோம்.

எமது மக்களுக்காக நாம் இந்த அரும்பணியை முன்னெடுத்தபோது பலத்த சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியாத்திற்கு ஆளாகியிருந்தோம். ஆனாலும் அந்த இடர்பாடுகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு நாம் அதைச் சாதித்தும் காட்டியுள்ளோம்.

அன்று நாம் குடியேற்றிய மக்கள் இன்றும் காணி உரிமம் இல்லாது படுகின்ற அவஸ்தைகளை நான் நன்கறிவேன். அந்த மக்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் விடயத்தில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட இதர அரசியல் தலைமைகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருவதனால் இற்றைவரையில் அது கைகூடாமல் போயுள்ளமையானது மிகுந்த வருத்தமளிக்கின்றது.

ஆதலினால் அந்த மக்களின் குடியிருப்புக் காணிகளை அவர்களுக்கு உரித்தாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அந்தக் காணிகளை அந்த மக்களுக்கே உரித்தாக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் விரைவுபடுத்தப்படும்.

இன்று மக்கள் மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியத்தை உணர்ந்துள்ள நிலையில் அந்த மாற்றுத் தலைமையை நாம் ஏற்றுக்கொண்டு எமது மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கு நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம்.

இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நான் நேரில் விஜயம் மேற்கொண்டு மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டதன் அடிப்படையில் மக்களின் அடிப்படை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டு நிச்சயம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதற்கு மக்களாகிய நீங்கள் எமது கட்சியின் வெற்றியை இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நிரூபித்துக் காட்டவேண்டும்

அவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தச் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து நாம் அயராது மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்றும் டக்ஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.

கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் திருமலை மாவட்டட நிர்வாக செயலாளர் புஸ்பராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை - கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர்...
வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவ...
சீநோர் நிறுவனத்தின் உற்பத்திகளை விரிவுபடுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!