தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, September 8th, 2018

தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில் அரசுமுறைப் பயணமாக நாளையதினம் இந்தியாவுக்கு செல்லவுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2010 ஆண்டு அப்போதைய இலங்கை அரசின் தூதுக்குழுவில் பங்கெடுத்து இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரிடம் தமிழ் மக்களுக்காக பல கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அதன் பிரகாரமாக தமிழ் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை பெறமுடிந்தது கலாசார மண்டபம் ஒன்றை பெற்றுக்கொடுக்க முடிந்தது தெற்கிலிருந்து வடக்கிற்கான புகையிரதப் பாதைகளை புனரமைத்து மீண்டும் யாழ். தேவி புகையிரதத்தை சேவையில் ஈடுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் அச்சுவேலியில் கைத்தொழில்பேட்டையை மீளப் புனரமைக்கவும் நாவற்குழியில் அமைத்திருந்த பனை ஆராய்ச்சி மையத்தை புனரமைக்கவும் உதவிகள் கேட்டேன் எமது விவசாய மக்களுக்கு உதவ 500 உழவு இயந்திரங்களைப் பெற்றுக்கொண்டேன் மாணவர்களுக்காக 25000 துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக்கொடுத்தேன் அதிகமான விளைச்சலைத் தரக்கூடிய கொய்யா முருங்கை பப்பாசி போன்ற பயிர்களை பெற்றுக்கொண்டேன் இவ்வாறு பல உதவிகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பாக அந்தப் பயணம் அமைந்தது.

இம்முறை ஆட்சியில் பங்கெடுத்திருக்காத போதும் நாளைய தினம் (09.09.2018) தற்போதைய அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில் மீண்டும் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செல்கின்றேன். இம்முறையும் எமது மக்களின் வாழ்வாதாரம் பொருளாதார மேம்பாடு உட்கட்டமைப்புகள் தொடர்பான பல கோரிக்கைகளை இந்தியத் தலைவர்களின்  கவனத்திற்கு எடுத்துச் செல்கின்றேன்.

எனது பயணத்தின் முதன்மை நோக்கமாக இருப்பது இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வு அபிவிருத்தியின் அவசியம் அன்றாடப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக யதார்த்தபூர்வமாக தெளிவுபடுத்துவதும் தென் இந்தியாவில் அகதிகளாக பல ஆண்டுகளாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் தமது அசையும் அசையாச் சொத்துக்களுடன் தாயகம் திரும்பி தமது பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ்வதற்;கான வழிவகைகள் தொடர்பாக எடுத்துரைப்பதுமேயாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts:

தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ...
யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர...
முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு - கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வ...

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் - பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அம...
தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...