உலகமயமாக்கலை அனுசரித்துச் செல்ல வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, August 9th, 2019

நாம் உலகத்தின் போக்கையும் அதன் ஒழுங்கையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள். வாக்குப் பெட்டிகளையும் பணப் பெட்டிகளையும் நேசிக்கும் குறுந்தூர பார்வையும், அரசியல் சுயலாபமும் எம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை. எமது கட்சியின் கொள்கையை எவ்வாறு உள்ளக அரசியலிலும், தேசிய அரசியலிலும்; வகுத்து செயலாற்றி வருகின்றோமோ?… அது போலவே சர்வதேச விவகாரங்கள் குறித்தும் வெளிவிவகார உறவுகள் குறித்தும், உலக ஒழுங்கின் போக்குகள் குறித்தும் எமது கட்சி உறுதியான யதார்த்தமான ஒரு கொள்கையைக் கொண்டிருக்கிறது.

வளர்ந்து வரும் நாடுகள் மீது உலக வல்லரசு நாடுகளின் உலகமயமாக்கல் திட்டம் பெரு வெள்ளம்போல் பாய்ந்து வருகின்றது. அதில் எமது இலங்கைத் தீவும் தப்பவில்லை. உலகமயமாக்கலோடு போட்டியிட்டு வெல்லும் முழுமையான திறன் எமது தேசிய பொருளாதாரத் திட்டங்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆகவே உலகத்தின் போக்கை உணர்ந்து உலகமயமாக்கலை நாம் ஓரளவிற்கு அனுசரித்துச் செல்ல வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்பவற்றுடன் அரசாங்கம் /அரசாங்க முகவர் நிறுவனங்கள் என்பன செய்து கொள்கின்ற ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல்’ பற்றிய சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதே வேளையில் எமது நாட்டின் தேசிய சமூகப் பொருளாதரத்தையும் சமாந்தரமாக நாம் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்காலத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இலங்கைத்தீவு திகழ வேண்டும். அந்த வகையில், வெளிநாட்டு நிறுவனங்களுடன் எந்தவித உள்நோக்கமும் இன்றி செய்யப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார ஒப்பந்தங்களை நாம் வரவேகின்றோம். ஆனாலும், தமது அரசியல் இராணுவ நோக்கங்களை நிறைவேற்றும் கனவுகளுடன் செய்யப்படும் எந்தவொரு ஒப்பந்தங்கள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மரத்திலிருந்து விழுந்த எமது மக்களை மாடுகள் ஏறி மிதித்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாடுகளிடமிருந்து எமது மக்களைக் காப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு, எமது மக்களின் வாக்குகளுடன் வந்தவர்கள், பண மூட்டைகளைச் சுமக்கின்ற கழுதைகளாக மாறிவிட்டுள்ள நிலையில், எருமை மாடுகளையும் கொண்டு வந்து எமது பகுதியிலே அவிழ்த்துவிட வேண்டாம் எனக் கோரிக்ககை விடுகின்றேன்.

Related posts:


முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வ...
வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக இருக்கும் தலைவர் டக்...
எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு - கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!