வடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, October 25th, 2018

வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பாவனையாளர்களுக்கு மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தொடர்ந்து ஏற்பட்டுவருகின்ற தாமதங்களுக்கான காரணம் என்ன? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கௌ;விநேரத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியிலுள்ள தென் மட்டுவில், மட்டுவில், கைதடி, நுணாவில், நுணாவில் மேற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மின் பாவனையாளர்களுக்கு கடந்த ஜூன் மாதம் மின் பாவனை கட்டணச் சிட்டைகள் வழங்கப்பட்டதன் பின்னர், ஒக்டோம்பர் மாதம் வரையில் வழங்கப்படவில்லை என்றும், இத்தகைய நிலையில் அண்மையில் மின் பாவனைக் கட்டண நிலுவையைச் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படுமென குறிப்பிட்டு, இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே நேரம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பல மாதங்களாக மின பாவனை கட்டணச் சிட்டைகள் பாவனையாளர்களுக்கு வழங்கப்படாதிருந்து எவ்விதமான முன்றிவித்தலும் இன்றி கடந்த 11ஆம் திகதி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், அம் மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பரீட்சைக்கு தோற்றிவருகின்ற பாடசாலை மாணவர்கள், குழாய்க் கிணறுகள் மூலமாக நீரைப் பெறுவோர், கடுமையான நோயாளிகள் போன்றோர் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மின் பாவனை கட்டணச் சிட்டகைள் வழங்குவதில் ஏற்படுகின்ற பல மாத கால தாமத நிலைமையானது இன்று நேற்றல்ல கடந்த சில வருடங்களாகவே வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. அந்தவகையில்

வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பாவனையாளர்களுக்கு மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தொடர்ந்து ஏற்பட்டுவருகின்ற தாமதங்களுக்கான காரணம் என்ன?

வாழ்வாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு, மாதா மாதம் ஒழுங்கு ரீதியில் மின் கட்டண சிட்டைகள் வழங்கப்படாமல், பல மாத கட்டணச் சிட்டடைகளை ஒரே தடவையில் வழங்கி, அத் தொகையினை செலுத்தாவிடத்து, மின் துண்டிக்கப்படும் என இறுதி அறிவித்தல் வழங்குவதிலும், மின் விநியோகத்தை துண்டிப்பதிலும் நியாம் இல்லை என்பதால், மேற்படி மின் பாவனையளர்களது நிலுவையை தவணை அடிப்படையில் அறவிடுவதற்கும், மின் விநியோகத் துண்டிப்பினை மேற்கொள்hதிருப்பதற்கும், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டவர்களுக்கு அதன் அடிப்படையில் மீள மின் விநியோகத்தினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

மின் சிட்டைகளை வழங்குவதற்கோ அல்லது மின் மாணி வாசிப்பிற்கோ ஆளணி பற்றாக்குறைகள் இருப்பின், வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகளின்றி ஆயிரக் கணக்கானோர் இருக்கின்ற நிலையில், அவர்களிடமிருந்து மேற்படி ஆளணியினை பூர்த்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா?

வடக்கு மாகாணத்தைச் சாராத வேறு மாகாணங்களிலிருந்து வடக்கின் மின்சார சபைகளுக்கான ஆளணிகள் நிரப்பப்பட்டுள்ளனவா? நிரப்பப்பட்டுள்ளன எனில், மாவட்ட ரீதியில் அவ்வாறு இணைக்கப்பட்டுள்வர்களது எண்ணிக்கை யாது? அதற்கான காரணங்கள் என்ன? என கேள்வியெழுப்பிய செயலாளர் நாயகம் மேற்படி விடயம் தொடர்பில் பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் தருமாறும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
பூநகரி - வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந...