தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது – டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

Sunday, June 14th, 2020

தனித்துவமான வரலாற்றை கொண்டது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவையும் எமக்கு கிடையாது என செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்பத்தில் இன்று நடைபெற்ற யாழ், நல்லூர் பிரதேச, கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் செயலாளர் நாயகத்தினால் தெளிபடுத்தும் நோக்கில் கொறோனா தொடர்பான சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

கடந்த பல வருடங்களாக மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயற்பட்டு வருகின்றது. அதைவிட நீண்ட அரசியல் அனுபவத்தினை கொண்டவர்கள் அதன் முக்கியஸ்தர்கள். எனவே எமது கட்சியை பொறுத்த வரையில் ஏனையவர்களின் முதுகில் சவாரி செய்ய வேண்டிய தேவையில்லை.

மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த காலத்தில் தமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி மேற்கொண்ட வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் முழுமையாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் வரவுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்தி எமது கரங்களை பலப்படுத்தும் பட்சத்தில் அடுத்த 5 வருடங்டகளுக்கள் அரசியலுரிமை அன்றாடப் பிரச்சினை அபிவிருத்தி ஆகிய அனைத்துக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தர எம்மால் முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts:

வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்ப...
அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...