தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018

“நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் “ என்ற கோரிக்கையுடன் மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறை நோக்கி மூன்று நாட்களாக நடைபவணியாக வருகின்ற யாழ். பல்கலை மாணவர்வர்களுக்கு உற்சாகமளிக்கும் முகமாக ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அநுராதபுரத்தில் பார்வையிட்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அதுபற்றி கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இலங்கை அரசு தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவு செலவுத்திட்டம் மீதான ஆதரவு நிபந்தனையாக அரசுக்கு முன்வைக்க வேண்டும். தமது பிர்ச்சனை களைக்கான தீர்வுகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர் இந்த திலையில்

தாமே இந்த அரசை ஆட்சிபீடம் ஏற்றியதாக தம்பட்டம் அடிக்கும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் கண்மூடித்தனமாக அரசுக்கு முண்டு கொடுப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்றும் தெரிவித்தார்.44077173_1881504845300093_1360501380011261952_n (1) 44027529_757496187927112_5849110008150622208_n 44049118_186497095582153_8263951479086252032_n (1)

Related posts:

நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
ஊர்காவற்துறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!