ஜமுனா ஏரி மக்களுக்கு காணி உரிமம் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி.

Saturday, January 27th, 2018

நல்லூர் ஜமுனா ஏரிப் பகுதியில் வாழும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழும் இக் காணிகளை குடியிருக்கும் மக்களுக்கு உரித்தாக்குவது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனையுடன் அவதானம் செலுத்தி வருகின்றோம் என்பதுடன் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு ஏககாலத்தில் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் ஜமுனா ஏரிப் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக மக்களாகிய நீங்கள் குடியிருக்கும் காணிகளுக்கான உரிமங்கள் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றீர்கள். குறிப்பாக காணி உரிமங்கள் இல்லாத காரணத்தினால் நீங்கள்படும் அவலங்களையும் இடர்பாடுகளையும் நான் நன்கறிவேன்.

இங்கு குடிநீர் பிரச்சினை வடிகாலமைப்புஇன்மை வீடமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் என்பது இங்கு வாழும் மக்களுக்கு பாரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இது போன்ற மக்களாகிய நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்பட்டு எல்லோரும் இயல்பான வாழ்வுக்கு திரும்ப வேண்டுமென்பதே எமது நிலைப்பாடுமாகும். மக்களாகிய நீங்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வடக்கு மாகாணசபை மூலமாக தீர்வுகள் காணக்கூடியதான நிலை இருந்தாலும் கூட அதில் வடக்கு மாகாணசபை இற்றை வரையில் அக்கறையற்று இருக்கின்றமையானது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும். எனவே மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு ஒரு வளமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் ஒருமித்த ஆதரவுப் பலத்தை எமக்குத் தர வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

அத்துடன் யாழ் குடாநாட்டில் கணினிக் கல்வியை அறிமுகம் செய்து வைத்து அது சார்ந்த கல்வித்துறையை எமது மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுத்து இன்று அதனூடாக தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுப்பதில் எமது பங்கு காத்திரமானது என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related posts:

நாம் ஆற்றிய பணிகளை தாம் ஆற்றியதாக உரிமை கோருவது கையாலாகாத்தனம் -  டக்ளஸ் எம்பி. சுட்டிக்காட்டு!
கச்சதீவு ஒப்பந்தத்தால் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை இந்தியாவுக்கு தாரைவ...
களப்பு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டநிதியை ஏன் உரிய முறையில்; பயன்படுத்த வில்லை நாரா அதிகாரிகளிடம் அ...

வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்காக சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!
கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சர்...