ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Tuesday, December 26th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள “ஜாக்” தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள  காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டங்கள் இருந்தது. அதில் 4 கட்டமே தற்போது பூர்த்தியாகியுள்ளது. ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அத்துடன் அவையும் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேவேளை உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு முடிந்த வரையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.

அதனடிப்படையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை ஜனாதிபதி காட்டுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது.

வடக்கில் எம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன்.

அதனால் சந்திப்புக்கு செல்லவில்லை. ஜனாதிபதியுடன் மக்களுக்காக தொலைபேசியில் கதைக்க கூடிய நிலையில் உள்ளேன். பல்வேறு தடவைகள் கதைத்தும் உள்ளேன்.

இதேநேரம் எமது கட்சி சார்பில், கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
வடக்கின் வீடற்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் - முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவ...
சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் அதிகா...