கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் – நடைமுறைச் சிக்கலுக்கும் தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, September 13th, 2020

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு ஏற்படக் கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு இரண்டு நாள் வியஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இந்நிலையில் மாவட்டத்தின் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளைச் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சருக்கு அறியப்படுத்திய சிறு தொழிலாளர், அதுதொடர்பில் அடிக்கடி  கலந்துரையாடப்பட்டு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அத்துடன் நாட்டிலேற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  கடந்த சில மாதங்களாக தமது தொழில் நடவடிக்கைகளில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை தோன்றியிருந்ததாகவும் அவற்றுக்கு தீர்வு பெற்றுத்தருவதற்கான வழிவகைகளை உருவாக்கி தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவற்றை பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு வங்கிகளில் ஏற்படக் கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென   தனியான ஒரு  பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்...
ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்...
கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தி நிலையங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!