வடக்கில் மீண்டும் விளைநிலங்கள் உயிர் பெறும் – விவசாயம் தளைத்தோங்கும்: வன்னியில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்

Thursday, July 16th, 2020

கடந்த கால இடம்பெயர்வுகளினால் காடாகிக் கிடக்கும் எமது மக்களின் விளை நிலங்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றெழும். அவற்றில் மீண்டும் விவசாயம் தளைத்தோங்கும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புதிய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

மன்னார், சின்னவலையன் கட்டு பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் மக்களனால் முன்வைக்கப்பட்ட கோரிககைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

கடந்த கால யத்தம் காரணமாக நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழ்ந்தமையினால் தங்களுடைய பெருமளவு விளை நிலங்கள் காடாக மாறியுள்ள நிலையில், வனவளத் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்டுத் தருமாறும் தெரிவிததனர்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், குறித்த விவகாரம் பல்வேறு பிரதேசங்களிலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், ஏற்கனவே அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருப்பதாக தெரிவத்தார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருமே குறித்த விவகாரத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு தன்னை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, தேர்தல் நிறைவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அழைத்து வந்து வனவளத் திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டுள்ள காணிகளை பெற்றுத் தருவதுடன் விவசாய நடவடிக்கைகளை வேகப்படுத்தி மக்களின் வாழ்வில் தன்னிறவை ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

Related posts:


அடங்காத நாற்காலி ஆசைகளுக்காகவே இங்கு சிலர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் - டக்ளஸ் தேவானந்தா!
வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...