குறுகிய நோக்கங்களுக்காக வன்முறைகள் ஊடாக தமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, October 12th, 2022


………
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதிலும் தான் உறுதியாக இருக்கின்ற போதிலும், குறுகிய நோக்கங்களுக்காக  வன்முறைகள் ஊடாக தமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற யாராவது, குறித்த விடயங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அலுவலகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திணைக்கள அதிகாரிகளுடன் கலந்ணுரையாடியதுடன், தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். –
முன்பதாக
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட நிலையில், இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

கைது செய்யப்பட்டவர்களுள் பெங்களூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 38 பேர் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறைவு செய்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு குறித்த உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. – 12.10.2022

Related posts:

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் - டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள்...
அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் - முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சந்திப்பு - புலம்பெயர் முதலீடுகள் தொ...

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ...
வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெ...