அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் – டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, October 22nd, 2019

நீண்டகாலமாக வாழும் காணி நிலங்களுக்கு உரிமங்கள்
வழங்கப்படாமையால் தாம் பல வாழ்வாதார வாய்ப்புக்களை இழந்து வருவதுடன் குறித்த காணிகள் பறிபோகு நிலையும் உருவாகியுள்ளதால் தமது குடியிருப்பு நிலங்களுக்கு உரிமங்களை பெற்றுத்ற்றுமாறு மன்னார் நடுக்குடா பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் மன்னார் நடுக்குடா பகுதி மக்களை சந்திது அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். இதன்போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

பல தசாப்தங்களாக தாம் இப் பூர்வீக நிலங்களில் வாழ்ந்துவந்தாலும் அதற்கான உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியத நிலையில் இருக்கின்றோம்.

இதற்கான உரிமங்களை பெற்றுக்கொள்ள நாம் யாழ்ப்பாணம் மாவட்ட செயல மற்றும் அனுராதபுரம் மாவட்ட செயலகங்களில் ஒரு தொகை நிதியையும் செலுத்தியுள்ளோம்.
ஆனாலும் அதற்கான படிமுறைகள் எதுவும் இதுவரை நடைபெறவிலை.

இதனால் தற்போது எமது காணிகள் பறிபோகும் சூழ்நிலை காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது எமது பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் நாளாந்தம் மானவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதைவிட எமது பிரதேசத்தில் பொது நிகழ்வுகளை நடத்த கூட ஒரு பொது மண்டபம் கிடையாது.வாழ்வாதார வசதிகளில் மிக குறைந்த நிலையில் இப்பகுதி மக்கள் இருப்பதால் அவர்களது வாழ்வாதார நிலைமைகளை உயர்த்த உதவிகள் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்த மக்கள் தமது பகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒருபோதும் அக்கறைகொள்வதில்லை என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்தனர்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் கடந்த காலங்களில் உங்கள் அரசியல் தெரிவுகள் தவறானதாக இருந்தமையால் தான் இந்த பாகுபாடுகளுக்கும் அக்கறையின்மைகளுக்கும் காரணம். ஆனால் இந்த நிலமைகளிலிருந்து நீங்கள் மீண்டெழுவதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அதாவது வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்க கோரும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ச வின் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய எம்முடன் கைகோர்து வாருங்கள் அந்த வெற்றியின் ஊடாக நான் உங்கள் பிரச்சினைகளுக்கெல்லாம் சிறந்த தீர்வுகளை பர்றுத்தர காத்திருக்கின்றோம் என்றார்.

Related posts:


பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் - பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ...
நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!