முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை – பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்பட்டன!

Thursday, April 29th, 2021

முல்லைத்தீவு கடற்பரப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கூட்டு நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்காரணமாக முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் போன்ற சட்ட விரோத தொழில் முறைகள் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் குறித்த மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் மாவட்டத்தின் மீன்வளம் குறைவடைந்து வருவதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கடற் படையின் கிழக்கு மாவட்ட தளபதி றியர் அட்மிறல் வை.எம்.  ஜெயரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கலிஸ்ரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத் தலைவர் ஜோன்ஸன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் நிகஸன் ஆகியோருடன் கடந்த 18 ஆம் திகதி கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கூட்டுப் பொறிமுறையொன்று  உருவாக்கப்பட்டது.

அதனடிப்படையில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் கடற்படயினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்டுகின்ற நடவடிக்கைகளின் போது சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றினால் அவர்கள் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வீட்டுத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட எமக்கு வீடுகளை பெற்றுத்தாருங்கள் - வவுனியாவில் டக்ளஸ் தேவானந்...
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக  மக்களுக்காய் பெரும்பணி செய்தவர்கள் நாம் - பூநகரியில் டக்ளஸ் எம்.பி சுட்ட...
ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
தமிழர்களின் எழுச்சிக் குரலானது ஒன்று பட்டு ஒலிப்பதே ஆகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் ...