சேதன பசளைகள பயன்பாட்டில் சில இடையூகள் இருந்தாலும் சில காலத்தில் அதுவே சிறந்ததாக அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, November 17th, 2021

ஆரம்பத்தில் சில இடையூகள் இருந்தாலும், சில காலத்தில் சேதன பசளைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகின்றபோது, ஓர் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது ஒரு சிறந்த நோக்கச் செயற்பாடாக அமைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தி தொடர்பில் நாம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளுக்கு இசைவாக சேதன பசளை மற்றும் சேதன கிருமி நாசினி உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்வது குறித்து போதிய அவதானம் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கென 35 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இரசாயன பசளை மற்றும் விவசாய உள்ளீடுகளின் இறக்குமதிக்கென வருடாந்தம் செலவிடப்பட்டு வருகின்ற சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாக்களை இதனால் மீதப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், இத்தகைய இரசாயன நச்சுத் தன்மைகள் கொண்டு வருகின்ற நோய்களிலிருந்து விடுபடவும் முடியும்.

அந்தவகையில் ஆரம்பத்தில் சில இடையூகள் இரு;நதாலும், சில காலத்தில் சேதன பசளைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகின்றபோது, ஓர் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது ஒரு சிறந்த நோக்கச் செயற்பாடாகும் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மேலும், எமது விவசாயத் துறையின் முன்னேற்றம் கருதி 70.70 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கால்நடைகள் அபிவிருத்திக்கென 1.7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் திரவப் பால் உற்பத்திகள் தற்போது பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. பண்ணைகள் அபிவிருத்தியடைந்து வருகின்றன. பாலில் நம் நாடு தன்னிறைவு காணுகின்றபோது, பாலுக்கெனவும் எமது மக்கள் வெளிநாடுகளை நம்பி இருக்கின்ற நிலைமை மாறும் என நினைக்கின்றேன். அண்மையில், பால் மாவுக்கென எமது மக்கள் அடைந்திருந்த நெருக்கடி நிலைமைகளை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடமாகாண அமைச்சர்களது மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது ஏன்? நாடாளுமன்றி...
தமிழ் மக்களின் பொருளாதார சிக்கல்களையும் கருத்தில் எடுத்த - சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வரவு செ...
காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே தனியார் படகுகளை சேவையிலீடுபடுத்த வீதிப் போக்குவரத்து ஆணைக் குழுவுக்க...

கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!
அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா - அ...